புதுச்சேரி: பெரியகாலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு ஆகாஷ், ரமணா என்ற இரு மகன்கள் உள்ளனர். பல ஆண்டிற்கு முன், ராசாத்தி தீக்குளித்து உயிரிழந்தார்.
இவரது தற்கொலைக்கு ராஜா தான் காரணம் என போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து, கடலுார் சிறைக்கு அனுப்பி விட்டனர். மூத்த மகன் ஆகாஷ் சுனாமியின்போது உயிரிழந்தார்.
இளைய மகன் ரமணா, 19. நேற்று முன்தினம் பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் வசிக்கும் செல்வம் வீட்டிற்கு குடிபோதையில் சென்று எனக்கு வாழ பிடிக்கவில்லை, சாக போகிறேன் என கூறினார். வரும் வழியில் பைக்கில் இருந்து விழுந்து விட்டதால் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற மருத்துவமனை செல்வதாக கூறி சென்றார்.
ஆனால் தான் வசிக்கும் வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.