ADDED : ஏப் 01, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : முத்தியால்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் கருவடிக்குப்பம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருவடிகுப்பம் பழைய சாரயக்கடை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில்கள் கூறினார். மேலும், அவரை விசாரணை செய்ததில், தின்டிவனம் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சரத்குமார், 20; என தெரியவந்தது. அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 50 பாக்கெட்டுகளில் இருந்த 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டு அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

