ADDED : ஏப் 01, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலி பரை போலீசார் கைது, கஞ்சா பொட் டலங்களை பறிமுதல் செய்தனர்.
பாகூர் மாஞ்சாலை ரோட்டில் பாகூர் போலிசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் பைக்கில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்தார்.
போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்த போது கடலுார், நடுவீரப்பட்டு, சஞ்சீவிராயன் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டியன் 26; என்பதும், அவர் பாக்கெட்டுகளில் 110 கிராம் கொண்ட சிறுசிறு கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பதும், அதனை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த, பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீசார் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

