ADDED : மே 27, 2024 05:12 AM

நெட்டப்பாக்கம்: திருபுவனையில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் (பொ) மற்றும் போலீசார் நேற்று காலை திருபுவனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்னர். அப்போது திருபுவனை பி.எஸ்.எல்., கம்பெனி எதிரில் வடமாநில வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓடினார். அவரை மடக்கி பிடித்த போலீசார், அவரை விசாரித்தனர்.
விசாரனையில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ண (எ) ஜெனா 32, என்பதும், இவர் திருபவனையில் தங்கி வேலை செய்து வந்ததும், சமீபத்தில் ஒடிசாவில் நடந்த தேர்தலில் ஓட்டுப்போட திருபுவனையில் இருந்து ஒடிசா சென்று, திரும்பும் போது ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் குட்காவை ரயில் மூலம் திருபுவனைக்கு கொண்டு வந்ததும், இவற்றினை திருபுவனை பகுதியில் உள்ள கம்பெனியில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் வாலிபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலப்பட்டு சிறையில் அடைத்தனர்.
