தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியால் குத்திய வாலிபர் கைது

கத்தியால் குத்திய வாலிபர் கைது

கத்தியால் குத்திய வாலிபர் கைது


ADDED : ஏப் 22, 2024 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2024 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: தகராறை தட்டிக் கேட்ட நபரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், நெடுங்காடு, குரும்பகரம் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன், 30; ஆசாரி. நேற்று முன்தினம் கலையரசனுக்கும், அவரது தாய் மல்லிகாவுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

அப்போது அதேப் பகுதியை சேர்ந்த சந்திரபாபு, 60, என்பவர் தகராறை தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கலையரசன், கத்தியால் சந்திரபாபுவை குத்தினார். காயம் அடைந்த அவர், அரசு மருந்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நெடுங்காடு சப் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப் பதிந்து, கலையரசனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us