/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடை ஊழியரை கத்தியால் குத்தி ஐபோன் பறித்த வாலிபர் கைது
/
கடை ஊழியரை கத்தியால் குத்தி ஐபோன் பறித்த வாலிபர் கைது
கடை ஊழியரை கத்தியால் குத்தி ஐபோன் பறித்த வாலிபர் கைது
கடை ஊழியரை கத்தியால் குத்தி ஐபோன் பறித்த வாலிபர் கைது
ADDED : ஆக 21, 2024 06:27 AM

புதுச்சேரி : ஜூஸ் கடை காசாளரை கத்தியால் குத்திவிட்டு, ஆப்பிள் ஐபோன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம், சுண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 31; புதுச்சேரி ஆம்பூர் சாலை, பாண்லே பூத் அருகில் உள்ள ஜே.பி.எஸ்., ஜூஸ் கடையில் காசாளர். கேண்டீன் வீதி ஸ்டீல் பிளாசாவில் உள்ள அறையில் தங்கியுள்ளார். கடந்த 18ம் தேதி வழக்கம்போல் கடையை மூடிவிட்டு, இரவு 11:00 மணிக்கு தனது அறைக்கு உடன் பணியாற்றும் சந்தோஷ்குமார், வெங்கடேஷ் உடன் சென்று துாங்கினார்.
நள்ளிரவு 1:50 மணிக்கு, அறையின் பின்பக்க கதவு அருகே மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
ராஜேஷ் மொபைல்போன் டார்ச்சை மர்ம நபரின் முகத்தில் அடித்து யார் என விசாரித்தார். அப்போது, மர்ம நபர் ராஜேஷ் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு, ராஜேஷின் ஆப்பிள் ஐபோனை பறித்து கொண்டு தப்பியோடினார்.
காயம்பட்ட ராஜேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தபோது, சாமிப்பிள்ளைத்தோட்டம், மெயின்ரோட்டைச் சேர்ந்த வினோத் (எ) பொன்னப்பன், 36; என்பது தெரியவந்தது. அடிக்கடி ஜூஸ் கடைக்கு வந்து செல்லும் வினோத், குடிபோதையில் ராஜேஷ் வீட்டிற்கு சென்று மொபைல் போனை பறித்து கொண்டு கத்தியால் குத்தியது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.