ADDED : ஏப் 21, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு, சின்னத்தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன், 34. கூலித்தொழிலாளி.
குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை 7:30 மணியளவில், அதே பகுதியில் உள்ள குளத்து தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.
இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

