ADDED : மே 07, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் கார் மோதி பைக்கில் வந்த வாலிபர் காயம்.
காரைக்கால் பைபாஸ் சாலை ஐஸ்வரியா கார்டனில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கஜேந்திரன், 29; டிரைவர் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் கஜேந்திரன் தனது சொந்த வேலையாக பைக்கில் நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் பலத்தகாயமடைந்த அவரை அரசு மருந்துவமனையில் சேர்த்தனர்.
திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் காரை ஒட்டிவந்த திருவள்ளூர் மாவட்ட திருப்பண்டியூர் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.