/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்தில் வாலிபர் பலி ஆட்டோ டிரைவருக்கு சிறை
/
விபத்தில் வாலிபர் பலி ஆட்டோ டிரைவருக்கு சிறை
ADDED : ஆக 07, 2024 06:15 AM
விருத்தாசலம் : சாலை விபத்தில் கட்டட தொழிலாளி இறந்த வழக்கில், ஆட்டோ டிரைவருக்கு 11 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த பூதாமூர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் பாவாடை மகன் வடிவேல்,27; கட்டட தொழிலாளி.
இவர், கடந்த 2013, ஏப்ரல் 4ம் தேதி இரவு 11:00 மணிக்கு, கடலுார் சாலையில் அரசு ஆண்கள் பள்ளி அருகே பைக்கை நிறுத்திவிட்டு, எதிரே உள்ள பெட்டிக்கடைக்கு நடந்து சென்றார்.
அப்போது, அவ்வழியே சென்ற ஆட்டோ மோதியது. அதில் படுகாயமடைந்த வடிவேல், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர், செல்வராஜ் நகர், பரமசிவம் மகன் ராமச்சந்திரன்,33; என்பவரை கைது செய்த விருத்தாசலம் போலீசார், அவர் மீது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அன்னலட்சுமி, ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரனுக்கு 11 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.