ADDED : மே 19, 2024 03:25 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : திண்டிவனம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சேகர் மகன் குமரேசன், 39; கட்டட மேஸ்திரியான இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் பின்புறம் தனது தம்பி மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேருடன் மது அருந்தினார்.
குமரேசன் பாட்டிலால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மணிகண்டன் உள்ளிட்டோர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்த டாக்டரிடம், தவறி கீழே விழுந்ததில் மது பாட்டில் குத்தி விட்டதாக கூறிவிட்டு, 5 பேரும் ஓடிவிட்டனர். குமரேசனை டாக்டர் பரிசோதித்ததில் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.
டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார், மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
