/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் கோபுர கலசம் திருட்டு வில்லியனுார் அருகே துணிகரம்
/
கோவில் கோபுர கலசம் திருட்டு வில்லியனுார் அருகே துணிகரம்
கோவில் கோபுர கலசம் திருட்டு வில்லியனுார் அருகே துணிகரம்
கோவில் கோபுர கலசம் திருட்டு வில்லியனுார் அருகே துணிகரம்
ADDED : மார் 01, 2025 04:19 AM

வில்லியனுார் : வில்லியனுார் அருகே கோவில் கோபுர கலசம் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனுார் அடுத்த பெருங்களூர் கிராமத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு மேல் நடை சாத்துவது வழக்கம்.
நேற்று காலை பூசாரி கோவிலை திறக்க சென்றபோது மூலவருக்கு மேலே உள்ள கோபுரத்தில் இருந்த கலசம் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கோவில் கமிட்டி சார்பில், கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் இளமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். தடயங்களை சேகரித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.