/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் சொத்து விபரங்கள் இணையத்தில் வெளியிடப்படும்
/
கோவில் சொத்து விபரங்கள் இணையத்தில் வெளியிடப்படும்
ADDED : ஆக 03, 2024 04:31 AM
புதுச்சேரி : கோவில் சொத்து, சிலைகள், ஆபரணங்கள் குறித்து பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
பட்ஜெட்டில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு வாரியம் குறித்து இடம் பெற்றுள்ள முதல்வரின் புதிய அறிவிப்புகள்:
புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களின் கடவுள் சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இதர அசையும் சொத்துகள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
கோவில் நில சொத்துக்களின் நில அளவை கணக்கிடப்பட்டு பாதுகாக்கப்படும். குத்தகைக்கு விடப்பட்ட கோவில் சொத்துகளுக்கு முறையான வாடகை வசூலிக்கப்படும். நடப்பு நிதியாண்டில் இந்து சமய
நிறுவனங்கள் மற்றும் வக்பு வாரியத்திற்காக 5.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்
பட்டுள்ளது.