/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் அரிப்பினை தடுக்க ரூ.25.46 கோடிக்கு டெண்டர்
/
கடல் அரிப்பினை தடுக்க ரூ.25.46 கோடிக்கு டெண்டர்
ADDED : ஆக 22, 2024 01:48 AM
புதுச்சேரி, : காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பினை தடுக்க ரூ.25.46 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து மீன்வளத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடல் அரிப்பினை தடுக்கும் பொருட்டு வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை கிராமங்களான கணபதிசெட்டிக்குளம், சின்னக்காலாப்பட்டு, பெரியக்காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி பகுதியில் கற்பாறைகள் கொண்டு கடற்கரையை பாதுகாக்க 25 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 216 ரூபாய் செலவில் தடுப்பு சுவர் அமைக்க பொதுப்பணித் துறை நீர்பாசன பிரிவு மூலமாக டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்ட பிறகு கடல் அரிப்பினை தடுக்கும் பொருட்டு, கற்பாறைகளை கொண்டு தடுப்பு சுவர் இந்த கடலோர கிராமங்களில் விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.