ADDED : மே 24, 2026 10:52 PM

புதுச்சேரி: டெரகோட்டா பொம்மைகள் உருவாக்குவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரியில் புவிசார் குறியீடு பெற்ற சுடுகளிமண் மூலம் டெரகோட்டா பொம்மைகள் செய்வது குறித்து கைவினை கலைஞர் முனுசாமி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக முருங்கப்பாக்கம் கைவினை கலைஞர்கள் கிராமத்தில் கோடையில் கற்றல் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் நடந்தது. பயிற்சி முகாமில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக பொருட்கள் சாமி சிலைகள் விலங்குகள் தாவரங்கள் பூ வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மைகளை சுடு களிமண் மூலம் டெரகோட்டா பொம்மைகளாக உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் பொம்மைகளை செய்து பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
