/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உயர்மட்ட விசாரணை குழு அமைத்த தமிழக அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
/
உயர்மட்ட விசாரணை குழு அமைத்த தமிழக அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
உயர்மட்ட விசாரணை குழு அமைத்த தமிழக அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
உயர்மட்ட விசாரணை குழு அமைத்த தமிழக அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
ADDED : ஏப் 28, 2024 04:09 AM

புதுச்சேரி : உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சையின்போது புதுச்சேரி வாலிபர் உயிரிழந்த விவகாரத்தில், உயர் மட்ட விசாரணை குழு அமைத்த தமிழக அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரியை சேர்ந்த செல்வநாதன் மகன் ஹேமச்சந்திரன், 26; பி.எஸ்சி. ஐ.டி. படித்து விட்டு, வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார். 150 கிலோ உடல் எடை இருந்ததால், உடல் பருமன் குறைக்க சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு, 22ம் தேதி அறுவை சிகிச்சை செய்தபோது, ஹேமச்சந்திரன் உடல்நிலை மோசமானது. உடன் அவர், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் 23ம் தேதி, அங்கு அவர் இறந்தார்.
தகவலறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், ஹேமச்சந்திரன் பெற்றோரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன், 5 டாக்டர்கள் கொண்ட உயர்மட்ட குழு விசாரணை நடத்தும் என தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியத்தை, ஹேமச்சந்திரன் தந்தை செல்வநாதன், இந்திய கம்யூ., புதுச்சேரி மாநில துணை செயலாளர் சேது செல்வம், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், செயலாளர் டாக்டர் சாந்தி, புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை சிவக்குமார், பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சின்ன குழந்தை ஆகியோர் சந்தித்து அமைச்சரின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது, 5 டாக்டர்கள் கொண்ட உயர்மட்ட குழு விசாரணை நடத்தி கட்டாயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என, அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
மேலும் உடல் பருமன் குறைப்பு சிகிச்சை மையம், சென்னை மற்றும் மதுரையில் அரசு சார்பில் தொடங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

