/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தட்டாஞ்சாவடி கமிட்டியில் ரூ. 2 கோடி பாக்கி உடனே வழங்க வியாபாரிகளுக்கு உத்தரவு
/
தட்டாஞ்சாவடி கமிட்டியில் ரூ. 2 கோடி பாக்கி உடனே வழங்க வியாபாரிகளுக்கு உத்தரவு
தட்டாஞ்சாவடி கமிட்டியில் ரூ. 2 கோடி பாக்கி உடனே வழங்க வியாபாரிகளுக்கு உத்தரவு
தட்டாஞ்சாவடி கமிட்டியில் ரூ. 2 கோடி பாக்கி உடனே வழங்க வியாபாரிகளுக்கு உத்தரவு
ADDED : மே 06, 2024 05:50 AM
புதுச்சேரி, : தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு ரூ. 2 கோடி பாக்கி வைத்த வியாபாரிகள், ஒரு வாரத்தில் பணத்தை கொடுக்கவில்லை என்றால், வியாபாரத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கடந்த 2018 மார்ச் மாதம், மத்திய அரசின் இ-நாம் திட்டம் துவக்கப்பட்டது.
மார்க்கெட் கமிட்டிக்கு விளை பொருட்களுடன் வரும் போது இ-லாட் முறையில் உத்தேச மதிப்பு இ-நாம் போர்ட்டலில் பதிவிடப்படும்.
வியாபாரிகள் இ -நாம் போர்டலில் விளை பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கின்றனர்.
அதிகபட்ச விலை நிர்ணயிக்கும் வியாபாரிக்கு விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு, புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதியான மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் நெல், மணிலா, பச்சை பயிறு, காராமணி, எள், உளுந்து, திணை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் மட்டும் ரூ. 12 கோடிக்கும், ஏப்ரல் மாதம் ரூ.5 கோடிக்கும் வர்த்தகம் நடந்தது.
இ - நாம் திட்டத்தில் விவசாய விளை பொருட்களை விற்பனை செய்த ஓரிரு நாட்களில், விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் அனுப்படும்.
ஆனால் கடந்த மார்ச் மாதம் தேர்தல் விதிகள் காரணமாக வங்கியில் அதிக பணம் செலுத்த முடியவில்லை என வியாபாரிகள் பணம் தர தாமதம் செய்தனர்.
கடந்த மாதம் மட்டும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ரூ. 2 கோடி வரை பாக்கி வைக்கப்பட்டது. விவசாயிகள் தினசரி கமிட்டிக்கு வந்து வியாபாரி பணம் செலுத்தி விட்டாரா என கேட்டு சென்றனர்.
தகவலறிந்த கலெக்டர் குலோத்துங்கன், ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை அழைத்து, விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.
ஒழுங்குமுறை விற்பனை கூட இயக்குனர் வசந்தகுமார், கடந்த 2 நாட்களுக்கு முன், வியாபாரிகளை அழைத்து கூட்டம் நடத்தினார்.
அப்போது, ஒரு வாரத்திற்குள் விவசாயிகளின் பாக்கியை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். தவறினால் அடுத்த வாரம், கமிட்டி ஏலத்தில் பாக்கி வைத்துள்ள வியாபாரி பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களில் ரூ. 40 லட்சம் வரை விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதி பணம் இந்த வாரத்தில் வரவு வைக்கப்படும் என கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.