/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் ஆண்டு பெருவிழா வரும் 31ம் தேதி துவக்கம்

ADDED : மே 28, 2024 03:35 AM
புதுச்சேரி : புதுச்சேரி துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 117ம் ஆண்டு பெருவிழா வரும் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகின்றது.
காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கின்றது. புதுச்சேரி கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் கலிஸ்ட்,மீரட் மறை மாவட்ட ஆயர் பாஸ்கர் ஏசுராஜ் ஆகியோர் கொடியேற்றி விழாவை துவக்கி வைக்கின்றனர்.
தொடர்ந்து தினமும், காலை, மாலைகளில் திருப்பலியும், மாலையில் சிறப்பு மறையுரையும், சிறிய தேர்பவனியும், நற்கருணை ஆசீர் நடக்கின்றது. ஜூன் 2ம் தேதி இயேசுவின் திருவுடல் திருரத்த பெருவிழா நடக்கின்றது.மதியம் 12 மணிக்கு நடக்கும் திருப்பலியை உதகை ஆயர் அமல்ராஜ் நிறைவேற்றுகிறார்.
7ம் தேதி இயேசுவின் திருஇருதய பெருவிழா கொண்டாடப்படுகின்றது.மதியம் 12 மணிக்கு திருப்பலிக்கு பின்,கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் கலந்து கொள்கிறார். அதை தொடர்ந்து ஆடம்பர பெருவிழா 9ம் தேதி நடக்கின்றது.
அன்று காலை 7.30 மணி திருப்பலியில் செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன், மாலை 5.30 மணிக்கு திருப்பலியில் துாத்துகுடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடக்கின்றது.பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்கேற்றனர்.