/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துறை வாரியான நிதி ஒதுக்கீடு விபரம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பு இம்மாத இறுதியில் சட்டசபை கூடுகிறது
/
துறை வாரியான நிதி ஒதுக்கீடு விபரம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பு இம்மாத இறுதியில் சட்டசபை கூடுகிறது
துறை வாரியான நிதி ஒதுக்கீடு விபரம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பு இம்மாத இறுதியில் சட்டசபை கூடுகிறது
துறை வாரியான நிதி ஒதுக்கீடு விபரம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பு இம்மாத இறுதியில் சட்டசபை கூடுகிறது
ADDED : ஜூலை 06, 2024 04:43 AM
புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட்டிற்கு கோரிய நிதியில், துறை ரீதியான ஒதுக்கீடு விபரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு 15வது சட்டசபை, 4வது கூட்டத்தொடரின் போது, 2023--24 நிதியாண்டிற்கு, ரூ. 11,600 கோடிக்கு முழுமையான பட்ஜெட் முதல்வர் ரங்கசாமி மார்ச் 13ம் தேதி தாக்கல் செய்தார்.
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, மாநிலங்கள் தங்களின் பட்ஜெட் விபரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அதன்பின்பு, மாநில அரசின் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பது வழக்கம். இந்தாண்டு தேர்தல் லோக்சபா தேர்தல் அறிவிப்பால், முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை.
கடந்த பிப்., 24ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட மாதம் வரையிலான செலவினங்களுக்கு, ரூ. 4634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.
தேர்தல் முடிந்ததால் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக மாநில திட்ட குழு கூட்டம், திட்டக்குழு தலைவரான கவர்னர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கடந்த மாதம் 18 ம் தேதி நடந்தது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரூ. 12,700 கோடிக்கு பட்ஜெட் திட்டமிடப்பட்டது. இதற்கான கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பட்ஜெட்டில் கோரப்பட்டுள்ள நிதி, துறை ரீதியான ஒதுக்கீடு குறித்து விளக்கமாக அனுப்ப மத்திய அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, பட்ஜெட் நிதி துறை ரீதியான ஒதுக்கீடு விபரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்பு, இம்மாத 4வது வாரத்தில் சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.