/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்ஜெட் மக்களைக் கரை சேர்க்க உதவாது ம. மு.க., தலைவர் ராமதாஸ் கருத்து
/
பட்ஜெட் மக்களைக் கரை சேர்க்க உதவாது ம. மு.க., தலைவர் ராமதாஸ் கருத்து
பட்ஜெட் மக்களைக் கரை சேர்க்க உதவாது ம. மு.க., தலைவர் ராமதாஸ் கருத்து
பட்ஜெட் மக்களைக் கரை சேர்க்க உதவாது ம. மு.க., தலைவர் ராமதாஸ் கருத்து
ADDED : ஆக 05, 2024 04:38 AM
புதுச்சேரி: இரண்டாவது இடைக்கால பட்ஜெட் மக்களைக் கரை சேர்க்க உதவாது என மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி சமர்பித்துள்ள பட்ஜெட்டில், காரைக்கால் பொது மருத்துவ மனைக்கு புதிய கட்டடம் உள்ளது.ஆயுர்வேதா மற்றும் சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது பாராட்டுக்குரியவை. தொழில் முனைவோருக்கு எளிதில் தொழில் தொடங்க அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து நடவடிக்கைகள், தொழில்துறையில் ஒரு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்று நம்பலாம்.
ஆனால் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஏற்கனவே இந்த ஆண்டில் கடந்த ஐந்து மாதங்களில் அரசு ரூ. 5,1 8 7 கோடியை செலவழித்துள்ளது.
மீதியுள்ள ரூ. 7,513 கோடியில் பெருமளவு, அதாவது, சுமார் ரூ. 62 35 கோடி, சம்பளம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி செலுத்துதல், உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்யப்படும். மீதி உள்ள தொகையில் திட்டத்திற்குப் போதுமான நிதி இருக்காது.
இந்த ஆண்டின் இரண்டாவது இடைக்கால பட்ஜெட் என்ற முறையில் இது மக்களைக் கரை சேர்க்க உதவாது. ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் பார்க்கும்போது கடலில் துடுப்பில்லாமல் தவிக்கும் படகை கரை சேர்க்க முயற்சி செய்யும் பட்ஜெட்டாகத்தான் இந்த பட்ஜெட் இருக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.