/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வயலில் இறங்கிய கார் பாகூர் அருகே பரபரப்பு
/
வயலில் இறங்கிய கார் பாகூர் அருகே பரபரப்பு
ADDED : ஆக 20, 2024 05:14 AM

பாகூர்: விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலை பரிக்கல்பட்டு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கார், நெல் வயலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழில் விஷயமாக தனது காரில் சிதம்பரம் சென்றுள்ளார். பின்னர், வேலையை முடித்து விட்டு, நேற்று மாலை நாகப்பட்டினம் - விழுப்புரம் புற வழிச்சாலை வழியாக கரிக்கலாம்பாக்கம் நோக்கி சென்றுள்ளார். பரிக்கல்பட்டு சந்திப்பில் திரும்பியபோது, கார் மேடு பள்ளமான பகுதியில் சிக்கியது. காரில் இருந்து இறங்கிய டிரைவர், ஜாக்கி வைத்து, காரை துாக்கிய போது, சாலை தளர்ச்சியான நிலையில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள நெல் வயல்வெளியில் இறங்கி விபத்தில் சிக்கியது. பின்னர் கிரேன் மூலமாக கார் மீட்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

