/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் சுதந்திர தின விழா முதல்வர் தேசிய கொடியேற்றினார்
/
புதுச்சேரியில் சுதந்திர தின விழா முதல்வர் தேசிய கொடியேற்றினார்
புதுச்சேரியில் சுதந்திர தின விழா முதல்வர் தேசிய கொடியேற்றினார்
புதுச்சேரியில் சுதந்திர தின விழா முதல்வர் தேசிய கொடியேற்றினார்
ADDED : ஆக 16, 2024 05:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த 78வது சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.
புதுச்சேரி அரசு சார்பில், கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. காலை 9.05 மணிக்கு முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின் முதல்வர் ரங்கசாமி நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, சுதந்திர தின உரையாற்றினார். காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பதக்கம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, காவல்துறை ஆயுதப்படை பிரிவு, போக்குவரத்து பிரிவு, காவல்படை பிரிவு உள்பட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பும், பள்ளி மற்றும் பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் புதுச்சேரியில் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களிலும் சுதந்திர தின விழா, தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது.