/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிக்கெட் மைதானம் முதல்வர் திறந்து வைப்பு
/
கிரிக்கெட் மைதானம் முதல்வர் திறந்து வைப்பு
ADDED : செப் 09, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விளையாட்டுகள் மீது ஆர்வம் கொண்டவர். தினசரி காலை, மாலையில் டென்னிஸ் விளையாடுவது வழக்கம்.
புதுச்சேரி அடுத்த ஆரோவில் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய மைதானத்தை திறந்து வைத்த முதல்வர் ரங்கசாமி, பந்து வீச கூறி கிரிக்கெட் விளையாடினார்.
ஓரிரு பந்துகளை பவுண்டரி லைனுக்கு அனுப்பிய முதல்வர் ரங்கசாமி, விளையாட்டு வீரர்களை ஆசீர்வதித்து புறப்பட்டார். முதல்வர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.