/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடும் பணி தலைமை செயலர் துவக்கி வைப்பு
/
புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடும் பணி தலைமை செயலர் துவக்கி வைப்பு
புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடும் பணி தலைமை செயலர் துவக்கி வைப்பு
புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடும் பணி தலைமை செயலர் துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 06, 2024 02:30 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சர்வதேச சற்றுச்சூழல் தின விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் பணியை, அரசு தலைமை செயலர் சரத் சவுகான் துவக்கி வைத்தார்.
வனம் மற்றும் வன விலங்கு துறை, புதுச்சேரி உயிரிப்பல்வகைமை வாரியம் சார்பில், சர்வதேச சுற்றுச்சூழல் தினம் வனத்துறை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை செயலர் சரத் சவுகான் மரக்கன்றுகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார். வனப்பாதுகாவலர் அருள் ராஜன், சுற்றுச்சூழல் பற்றி விளக்க உரை வழங்கினார்.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தின், இந்தாண்டு கருத்து, நில மறுசீரமைப்பு, பாலைவன பசுமையாக்கல் மற்றும் வறட்சி எதிர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சாலையோர இரு சக்கர வாகன பழுது பார்ப்பவர்கள், 36 நபர்கள் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து பிரசார நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
இந்திராகாந்தி மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும், வனத்துறை சார்பில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவனம் சார்பில், 100,க்கும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதற்கான ஏற்பாட்டை, வேளாண் அலுவலர் தலைமையில், செயல் திட்ட உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், துணை இயக்குநர் ராஜகுமார் நன்றி கூறினார்.