/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை
/
வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை
ADDED : மே 07, 2024 04:07 AM
விழுப்புரம் : பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளை அடித்து சென்ற நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம், குருசாமிபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மணவாளன், 65; திரு.வி.க., வீதியில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவர், கடந்த 2ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் ஊருக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 5 சவரன் நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.
புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.
மேலும், இதுகுறி்தது வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.