/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒட்டுமொத்த தேசமும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது: கவர்னர் பேச்சு
/
ஒட்டுமொத்த தேசமும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது: கவர்னர் பேச்சு
ஒட்டுமொத்த தேசமும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது: கவர்னர் பேச்சு
ஒட்டுமொத்த தேசமும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது: கவர்னர் பேச்சு
ADDED : மார் 04, 2025 04:31 AM

புதுச்சேரி: ஒட்டுமொத்த தேசமும், இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
டில்லியில் நடந்த குடியரசு தின விழா அணி வகுப்பில், புதுச்சேரி என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி திரும்பிய என்.சி.சி., வீரர்களுக்கான தேநீர் விருந்து நிகழ்ச்சி, கவர்னர் மாளிகையில் நடந்தது. இதில், 49 தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்துகொண்டனர். கவர்னர் கைலாஷ்நாதன், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தேநீர் விருந்து அளித்து கவுரவித்தார்.
அப்போது, தேசிய மாணவர் படை வீரர்கள் உருவாக்கிய போர் விமானம், போர் கப்பல் மற்றும் துப்பாக்கியின் மாதிரி வடிவங்களை, கவர்னர் பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு - புதுச்சேரி தேசிய மாணவர் படையின் துணை தலைமை இயக்குனர் ராகவ், விளையாட்டு துறை செயலர் சுந்தரேசன், புதுச்சேரி தேசிய மாணவர் படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் கவர்னர் பேசியதாவது:
டில்லி அணிவகுப்பிலும், தேசிய முகாம்களில் கலந்து கொண்டு, போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்திருக்கும் உங்களை வரவேற்று மகிழ்கிறேன். உங்களால், புதுச்சேரி மாநிலம் பெருமை அடைகிறது. டில்லியின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பயிற்சி செய்து, நீங்கள் சாதனை படைத்துள்ளீர்கள். இந்த அனுபவங்கள், உங்களிடம் மறைந்துள்ள சக்தியை அடையாளம் காட்டுகிறது.
இந்த பாடங்கள், கடைசிவரை உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும். இந்தியா இளைஞர்களின் தேசம். நாட்டின் மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் இளைஞர்கள். ஒட்டுமொத்த தேசமும், இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. நீங்கள் தான் இந்த நாட்டை வழிநடத்த உள்ளீர்கள். புயல், வெள்ளம், நிலநடுக்கம், ரயில் விபத்து போன்ற பல நேரங்களில் என்.சிசி., மாணவர்கள், மிகுந்த மன வலிமையோடு சேவை செய்கின்றனர். நமது தேசிய மாணவர் படையின் வெற்றி, பிற மாணவர்களுக்கும் உத்வேகத்தை தரும். இவ்வாறு கவர்னர் பேசினார்.