/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'குடும்பம் கஷ்டத்தில் வாடுகிறது'; ஆம்புலன்ஸ் டிரைவர் உருக்கமான ஆடியோ
/
'குடும்பம் கஷ்டத்தில் வாடுகிறது'; ஆம்புலன்ஸ் டிரைவர் உருக்கமான ஆடியோ
'குடும்பம் கஷ்டத்தில் வாடுகிறது'; ஆம்புலன்ஸ் டிரைவர் உருக்கமான ஆடியோ
'குடும்பம் கஷ்டத்தில் வாடுகிறது'; ஆம்புலன்ஸ் டிரைவர் உருக்கமான ஆடியோ
ADDED : மே 05, 2024 03:46 AM
புதுச்சேரி : இரண்டு மாத சம்பளம் வழங்காததால், தனது குடும்பம் மிகவும் கஷ்டத்தில் வாடுவதாவும், பெட்ரோலுக்கு பணம் கொடுக்குமாறு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உருக்கமாக பேசும் ஆடியோ வைலராகி வருகிறது.
புதுச்சேரி, சுகாதாரத்துறை தேசிய சுகாதார இயக்கம் மூலம் 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது. 64 பேர் டிரைவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ. 10 முதல் 12 ஆயிரம் வரை சம்பளம். மாதந்தோறும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்காததால், பலரது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது.
இந்நிலையில், நெட்டபாக்கம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அரவிந்த், நோடல் அதிகாரி துரைசாமிக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆடியோவில், வேலை பார்க்க சொன்னீர்கள். ஆனால் சம்பளம் வரவில்லை. புதுச்சேரியில் இருந்து நெட்டபாக்கம் சென்றுவர தினசரி ரூ. 100 செலவு ஆகிறது. சம்பளம் வராததால் மிகவும் கஷ்டமாக உள்ளது. சம்பளம் வராததால் நாளைக்கு பணிக்கு செல்ல மாட்டேன். மனைவி, பிள்ளைகள் சம்பளம் இன்றி அழுகிறார்கள். இதற்கு முதல்வர் முடிவு எடுக்க வேண்டும். தயவு செய்து சம்பளம் போடுங்கள். துரைசாமி சார் எனக்கு ரூ. 300 கூகுள் பே மூலம் அனுப்புங்கள்.
சம்பளம் இன்றி வேலை செய்வதிற்கு மனைவியிடம் தினசரி திட்டு வாங்குகிறேன் என, அதில் கூறப்பட்டுள்ளது. சம்பளம் வழங்காத மன அழுத்தில் ஆடியோ பதவிட்டதாக கூறிய அரவிந்த், எதிர் வீட்டில் வசிக்கும் நபரிடம் ரூ. 100 கடன் வாங்கி கொண்டு நேற்று பணிக்கு சென்றார் என்பது குறிப்பிடதக்கது.