/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரையில் கம்பீரமாக நிற்கும் பிெரஞ்சியரின் சுங்க கட்டடம்
/
கடற்கரையில் கம்பீரமாக நிற்கும் பிெரஞ்சியரின் சுங்க கட்டடம்
கடற்கரையில் கம்பீரமாக நிற்கும் பிெரஞ்சியரின் சுங்க கட்டடம்
கடற்கரையில் கம்பீரமாக நிற்கும் பிெரஞ்சியரின் சுங்க கட்டடம்
ADDED : செப் 08, 2024 05:44 AM

புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலைக்கு எதிரே நாணயம் போன்று வட்டவடிவில் கம்பீரமாக நிற்பது, பாரம்பரியமிக்க பிெரஞ்சு கட்டடமாகும்.
இக்கட்டடம் இப்போது, புதுச்சேரி ஜி.எஸ்.டி., கலால் துறை ஆணையரக அலுவலகமாக இருந்தாலும், அக்காலத்தில் பிெரஞ்சியரின் அரச கொடி கம்பத்தினை தாங்கி நின்று சுடர்விட்டு பறந்த பெருமையை தன்னகத்தே கொண்டது.
புதுச்சேரியில் வணிகத்திற்காக வந்த பிெரஞ்சியர்கள் வலுவாக கால்தடம் பதித்த பிறகு தங்களுக்கென தனி அரச கொடி கம்பத்தினை பறக்கவிட முடிவு செய்து, பவ்வியோன் வீதியில் அதாவது, தற்போதுள்ள சுய்ப்ரேன் வீதியில் அமைத்து, மரியாதை செலுத்தி வந்தனர்.
ஆனால், 1761ல் புதுச்சேரி மீது போர் தொடுத்தபிரிட்டிஷார் இதனை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கினர். அதன் பிறகு, மீண்டும் அரச கொடி கம்பத்தினை அமைக்க முடிவு செய்த பிெரஞ்சியர்கள் 1827ல் ஸ்பினாஸ் என்ற பொறியாளரை வரவழைத்து தற்போதுள்ள இடத்தில் அப்போதைய துறைமுகத்திற்கு வட்ட வடிவில் அரச கொடி கம்பத்தை அமைத்தனர்.அடுத்து 1836ல் இங்கு தரையில் சதுர கட்டட தளம்போடப்பட்டு, அதன் நடுவில் அரச கம்பம் நட்டு மரியாதை செலுத்தப்பட்டது. ஆனால் கட்டடம் எழுப்பப்படவில்லை.
அதன் பின், 1860ல் தான் தற்போதுள்ள வட்ட வடிவில் கட்டம் கட்டி, அரச கொடியேற்ற கட்டடமாக மாற்றி, அதன் மேல் அரச கொடியை பறக்கவிட்டனர். கடந்த 1817ம் ஆண்டு முதல் இதில் சுங்க சோதனையில்லாத துறைமுகம் இருந்த போதிலும், 1941 ஜனவரி 28ம் தேதி சுங்க துறை அமல்படுத்தப்பட்டது.
அந்த காலத்தில் கப்பல் வழியாக புதுச்சேரி வந்த பயணிகளுக்கு இங்கு தான் முத்திரையிட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரியில் இருந்து வெளிநாடு சென்ற பயணிகளுக்கும் இங்கு முத்திரையிடப்பட்டு கப்பல் ஏறி சென்றனர்.
கடந்த 1954ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புதுச்சேரி விடுதலை அடைந்தபோது இந்த கட்டடத்தில் இருந்த பிெரஞ்சு கொடி இறக்கப்பட்டு, இந்திய கொடி ஏற்பட்டு, பட்டொளி வீசி பறந்து வருகிறது.கடற்கரை சாலையில், கம்பீரமாக நிற்கும் இந்த சுங்க கட்டடம் பிரெஞ்சியரின் ஆழமான கப்பல் போக்குவரத்து வரலாற்றினை தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன் பிெரஞ்சியரின் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக பறைசாற்றி வருகிறது.