தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுமியை கடத்தியவர் கைது

சிறுமியை கடத்தியவர் கைது

சிறுமியை கடத்தியவர் கைது


ADDED : ஏப் 01, 2024 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2024 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு : கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரை கடந்த மாதம் 19ம் தேதி முதல் காணவில்லை.

நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் அந்த சிறுமி, உளுந்துார்பேட்டை அடுத்த காந்தலவாடி தனசேகர் மகன் முருகன், 23; என்பவருடன் நின்று கொண்டிருந்தார்.

தகவலறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சிறுமி மற்றும் முருகனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் முருகன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, இருவரையும் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us