/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைதான மீனவர்கள் மீது அரசுக்கு அக்கறையில்லை; : மாஜி எம்.பி., ராமதாஸ் முன்னாள் எம்.பி., ராமதாஸ் குற்றச்சாட்டு

ADDED : மார் 03, 2025 03:56 AM
காரைக்கால், : காரைக்கால் மீனவர்கள் மீது, புதுச்சேரி அரசுக்கு அக்கறை இல்லை என, முன்னாள் எம்.பி., ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள், விரைவில் தாயகம் திரும்புவார்கள் என, கடந்த 18ம் தேதி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார். கடந்த 24ம் தேதி, மீட்கப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார். அந்த மீனவர்களின் உறவினர்களும், நம்பிக்கையுன் இருந்தனர்.
ஆனால், அமைச்சரின் வாக்குறுதி, ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் விடுவிக்கவில்லை. அவர்களது சிறைகாவல் மார்ச் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
துப்பாக்கி சூடு நடத்தி, மீனவர்கள் கைது செய்யப்பட்ட பிரச்னை தீவிரம் கருதி, முதல்வரோ, அமைச்சரோ டெல்லிக்கு சென்று, உள்துறை மற்றும் வெளி உறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து, விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை, ஜாமினில் எடுத்து வந்து சிகிச்சை அளித்திருக்கலாம். அதையும் அரசு செய்யவில்லை. காரைக்கால் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும், முதல்வரோ, அமைச்சரோ மீனவர்களை சந்திக்கவில்லை.முதல்வர், அமைச்சர்களுக்கு, காரைக்கால் மீனவர்கள் மீது அக்கறை இல்லை. இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.