நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புதுச்சேரி கல்விபங்களா முதல் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் 52, தனியார் ஓட்டல் ஊழியர். இவர் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் இவர் நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இதனை மனைவி கீதாஞ்சலி கண்டித்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி காலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

