/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச காற்றாடி திருவிழா 23ல் துவங்கி 3 நாள் நடக்கிறது
/
சர்வதேச காற்றாடி திருவிழா 23ல் துவங்கி 3 நாள் நடக்கிறது
சர்வதேச காற்றாடி திருவிழா 23ல் துவங்கி 3 நாள் நடக்கிறது
சர்வதேச காற்றாடி திருவிழா 23ல் துவங்கி 3 நாள் நடக்கிறது
ADDED : ஆக 19, 2024 05:14 AM
புதுச்சேரி: புதுச்சேரி ஈடன் பீச்சில் வரும் 23ம் தேதி சர்வதேச காற்றாடி விழா துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.
புதுச்சேரியில் உள்ள அழகிய கடற்கரையில் ஒன்று வீராம்பட்டினம் ஈடன் பீச். பளபளக்கும் வெள்ளை மணலுடன், சுத்தமான சுற்றுப்புறத்தை கொண்ட ஈடன் கடற்கரை, புதுச்சேரியில் நீல நிறக் கொடி சான்றளிக்கப்பட்ட பெருமைமிக்க கடற்கரையாகும்.
அதுமட்டுமின்றி இந்த ஈடன் கடற்கரை கேரளா கடற்கரை போன்று பசுமையாக காட்சியளிக்கிறது.
இந்த ஈடன் பீச்சில் வரும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் சர்வதேச காற்றாடி விழாவினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதியம் 2:00 மணி முதல் மாலை வரை இந்த காற்றாடி திருவிழா நடக்கிறது.
இதற்கான பெயர் பதிவுகள் https://insider.in/eden-beach-international-kite-festival-pondicherry-aug25-2024/event என்ற ஆன்லைனில் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, சுவிச்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 40க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த காற்றாடி திருவிழாவில் குறைந்தபட்சம் 6 அடி முதல் அதிகபட்சம் 19 அடி வரையிலான 120 ராட்சத பட்டங்களும் பறக்க விடப்படப்பட உள்ளன.
புதுச்சேரியில் பிரமாண்டமாக சர்வதேச அளவில் ஒருங்கிணைத்து காற்றாடி திருவிழா நடப்பது இதுவே முதல்முறை. 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை. 12 வயதிற்கு மேற்பட்ட புதுச்சேரி காற்றாடி விரும்பிகளும் 100 ரூபாய் செலுத்தி கலந்து கொள்ளலாம்.