/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாட்டிற்கு விஷம் வைத்து கொன்றவர் கைது
/
மாட்டிற்கு விஷம் வைத்து கொன்றவர் கைது
ADDED : ஆக 03, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம், ஆர்.கே., நகரை சேர்ந்தவர் விசாலாட்சி,50; இவரது மாடுகள், ஆறுமுகம் என்பவரின் தோட்டத்தில் புகுந்து செடிகளை கடித்து சேதப் படுத்தின.
இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், காக்கையாந்தோப்பு வயலில், மேய்ந்த ஒரு மாடு இறந்தது. இதுகுறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.