/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
ADDED : ஆக 28, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முதலியார் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, குடிபோதையில், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துலுக்காத்தம்மன் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த சதீஷ்குமார், 24; என்பவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.