/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... எல்லையில் வரவேற்கும் கல்லறை
/
அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... எல்லையில் வரவேற்கும் கல்லறை
அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... எல்லையில் வரவேற்கும் கல்லறை
அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... எல்லையில் வரவேற்கும் கல்லறை
ADDED : ஜூலை 07, 2024 03:42 AM

திண்டிவனம் நெடுஞ்சாலை வழியாக புதுச் சேரிக்குள் நுழையும்போது, புதுச்சேரி நுழைவுவாயிலுக்கு அருகில், சாலையின் இடது பக்கத்தில் கூம்பு வடிவ கோபுரத்துடன் நினைவு துாண் ஒன்று இருப்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
ஏதோ நினைவு துாண் என நினைத்து பலரும் கடந்து சென்று இருப்பீர்கள். உண்மையில் அது நினைவு துாண் அல்ல. ஆங்கிலேயே மேஜர் வில்லியம் ஸ்டீவன்ஸின் பெருமையை நினைவுகூறும் கல்லறையாகும்.
இந்தியாவில் ஆங்கிலே யர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடப்பது வழக்கம். புதுச்சேரியை ஆங்கிலேயர்கள் அடிக்கடி முற்றுகையிட்டு கைப்பற்றுவதும், பிறகு உடன்படிக்கை ஏற்பட்டு புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் வசம் செல்வதும் தொடர் கதையாக இருந்தது. கடந்த 1778ம் ஆண்டில், ஆங்கிலேய படைத்தளபதி போஸ்கோவன் தலைமையிலான படைகள் புதுச்சேரியை முற்றுகையிட்டது.
பல நாட்கள் நீடித்த இந்த போரில், ஆங்கிலேய மேஜர் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்பவர் உயிரிழந்தார். அவருடைய உடல் அங்கேயே புதைக்கப்பட்டு வீரக்கல்லறை எழுப்பப்பட்டது.
கல்லறை இடம் பெற்றுள்ள கல்வெட்டில் 'புதுச்சேரி முற்றுகையின்போது, 1778ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி எதிர்பாராதவிதமாக குண்டுக்கு பலியான கிழக்கிந்திய குழுமத்தின் மேஜர், தலைமை பொறியாளர் வில்லியம் ஸ்டீவன்ஸ் நினைவாக எழுப்பப்பட்டுள்ளது' குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், துணிச்சலான வீரரும், பெருமைமிக்கவருமான வில்லியம் ஸ்டீவன்ஸ் சக தோழர்களால் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டார். அவரது மரணம் அவர்களுக்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் அவர்கள் தவிக்கின்றனர். அவர் மீது கொண்ட அன்பு, மரியாதை, மதிப்பின் அடையாளமாக, தலைமை ராணுவ தளபதி சர் ெஹக்டர் மன்றோவால் இந்த நினைவு சின்னம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் கல்லறை கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.