/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்
/
வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்
வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்
வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்
ADDED : ஜூன் 15, 2024 05:21 AM

புதுச்சேரி: புதுச்சேரி வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் அண்மையில் நடந்தது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் நடந்த இத்தேர்தலில் மொத்தம் 1033 வக்கீல்கள் ஓட்டுப் போட்டனர்.
தலைவர் பதவிக்கு அண்ணாதுரை, பாலசுந்தரம், பச்சையப்பன், ரமேஷ், சாய்ராஜகோபால், சுப்ரமணியன் ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.
ஓட்டு பதிவு முடிந்தவுடன் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் ரமேஷ் 376 ஓட்டுகள் பெற்று புதுச்சேரி வக்கீல்கள் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நாராயணகுமார் 619 ஓட்டுகள் பெற்று வெற்றிப் பெற்றார். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ராஜபிரகாஷ் 812 ஓட்டுகளுடன் வெற்றிப் பெற்றார்.
துணைத் தலைவராக இந்துமதி புவனேஸ்வரி, இணைச் செயலாளர்களாக ரீனா ஐஸ்வர்யா, கார்த்திகேயன், இளங்கோவன், ராஜேஷ், மதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக புவனேஸ்வரி, பரிமளா, தமிழ்ச்செல்வி, ஆனந்தன், பஷீர் அகமத், இளவரசன், கண்ணதாசன், மணிகண்டன், பிரேம்குமார், ராஜா செல்வம் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி செந்தில்குமார் பணியாற்றினார்.
புதுச்சேரி வக்கீல் சங்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.