/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய பஸ் நிலையம் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும் ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தகவல்
/
புதிய பஸ் நிலையம் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும் ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தகவல்
புதிய பஸ் நிலையம் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும் ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தகவல்
புதிய பஸ் நிலையம் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும் ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தகவல்
ADDED : ஜூலை 08, 2024 04:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் முடிந்து, வரும் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில், ராஜிவ் காந்தி பஸ் நிலையம் 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. மக்கள் தொகைக்கு பெருக்கத்திற்கு ஏற்ப பஸ் நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 31 கோடி மதிப்பில் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணி கடந்த ஆண்டு ஜூன் 28ம் தேதி துவங்கியது.
4.41 ஏக்கர் பரப்பில் லோக்கல் டவுன் பஸ்கள் 22, மினி பஸ்கள் 12, ஆம்னி பஸ்கள் 12 நிறுத்த தனித்தனி நடைமேடை, ஓட்டல்கள், பயணிகள் காத்திருக்கும் வளாகம், டிக்கெட் புக்கிங் அறைகள், லாக்கர் ரூம், போக்கு வரத்து துறை அலுவலகம், முதல் உதவி சிகிச்சை மையம், ஏ.டி.எம்., பயணிகள் தங்கும் விடுதிகள், 31 கடைகள் கட்டும் பணி நடக்கிறது.
இதுதவிர 24 கார், 445 பைக்குகள் நிறுத்தும் அளவிலான பார்க்கிங் இடம் அமைக்கப்படுகிறது. 8 மாதத்தில் பணிகள் முடிக்க ஒர்க் ஆர்டர் வழங்கப்பட்டது. ஆனால் ஓராண்டு கடந்தும் பணிகள் முடிக்கவில்லை.
கடந்த 16ம் தேதி ஏ.எப்.டி. மைதானத்திற்கு பஸ் நிலையம் மாற்றப்பட்டது. அதன்பிறகு, பஸ் நிலைய கட்டுமான பணி வேகம் எடுத்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில்; பஸ் நிலைய கட்டுமான பணிகள் வேகமாக நடக்கிறது. வரும் செப்., மாதத்திற்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தனர்.