/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கீழ்கூத்தப்பாக்கம் புதிய மேம்பாலம் வாகன போக்குவரத்துக்கு திறப்பு
/
கீழ்கூத்தப்பாக்கம் புதிய மேம்பாலம் வாகன போக்குவரத்துக்கு திறப்பு
கீழ்கூத்தப்பாக்கம் புதிய மேம்பாலம் வாகன போக்குவரத்துக்கு திறப்பு
கீழ்கூத்தப்பாக்கம் புதிய மேம்பாலம் வாகன போக்குவரத்துக்கு திறப்பு
ADDED : மே 15, 2024 01:07 AM

வானுார்: கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி - திண்டிவனம் இடையே ரூ.273.6 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்கள் தினந்தோறும் கடந்து செல்கிறது.
இந்த சாலையில் முக்கிய சந்திப்பான விழுப்புரம் மாவட்டம், கீழ்கூத்தப்பாக்கம் - கிளியனுார் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படாததால் விபத்து ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம், அப்பகுதியில் ரூ.20.57 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு மார்ச் மாதம் துவங்கியது. கடந்த மார்ச் மாதம் முடிக்க வேண்டிய பணிகள், நீடித்துக்கொண்டே சென்றது.
பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியும், மேம்பாலத்தின் மேல் 7 மீட்டர் உயரத்தில் தாழ்வாக உயர் மின்னழுத்த கம்பிகள் சென்றது. இதனால் மேம்பாலத்தில் உயரம் அதிகமான வாகனங்கள் சென்றால், மின் விபத்து ஏற்படும் சூழல் நிலவியதால், மேம்பாலம் திறப்பத்தில் சிக்கல் நிலைவியது.
இந்நிலையில், திண்டிவனம் மின் துறையின் ஒத்துழைப்போடு, நேற்று முன்தினம் தாழ்வாக சென்ற மின் கம்பியை, போக்குவரத்துக்கு பாதிக்காத வகையில், உயர்த்தினர். அதனைத் தொடர்ந்து, அன்றைய தினமே பிற்பகலுக்கு மேல், மேம்பாலத்தின் இருபக்கமும், வாகனங்கள் செல்ல திறந்து விடப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

