/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியின் புதிய கவர்னர் 7ம் தேதி பதவி ஏற்கிறார்
/
புதுச்சேரியின் புதிய கவர்னர் 7ம் தேதி பதவி ஏற்கிறார்
புதுச்சேரியின் புதிய கவர்னர் 7ம் தேதி பதவி ஏற்கிறார்
புதுச்சேரியின் புதிய கவர்னர் 7ம் தேதி பதவி ஏற்கிறார்
ADDED : ஆக 05, 2024 04:22 AM
புதுச்சேரி: புதுச்சேரியின் புதிய கவர்னர் கைலாசநாதன் வரும் 7ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
புதுச்சேரி,தெலுங்கானா மாநிலங்களை கூடுதலாக கவனித்து வந்த கவர்னர் ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து புதுச்சேரி கவர்னராக கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.
புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்ட கைலாசநாதன் நாளை 6ம் தேதி புதுச்சேரி வருகிறார். மறுநாள் 7 தேதி காலை 11.15 மணிக்கு அவர் ராஜ்நிவாசில் பதவி ஏற்கின்றார்.
இதில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதனுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு செய்து வைக்கிறார்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்கின்றனர்.
புதிய கவர்னர் பதவி ஏற்பு விழாவையொட்டி ராஜ்நிவாஸ் முழு வீச்சில் ரெடியாகி வருகின்றது.