/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்த சிறுமியின் பெற்றோரிடம் ரூ. 20 லட்சம் நிதி முதல்வர் வழங்கல்
/
இறந்த சிறுமியின் பெற்றோரிடம் ரூ. 20 லட்சம் நிதி முதல்வர் வழங்கல்
இறந்த சிறுமியின் பெற்றோரிடம் ரூ. 20 லட்சம் நிதி முதல்வர் வழங்கல்
இறந்த சிறுமியின் பெற்றோரிடம் ரூ. 20 லட்சம் நிதி முதல்வர் வழங்கல்
ADDED : ஜூன் 29, 2024 06:25 AM
புதுச்சேரி : வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த சிறுமியின் பெற்றோரிடம், முதல்வர் ரங்கசாமி, 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
புதுச்சேரியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன், சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது பெற்றோரிடம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், முதல் தவணையாக 50 சதவீத நிதி, 4 லட்சத்து, 12 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் அரசின் கூடுதல் நிவாரணம், ரூ.3 லட்சம் என மொத்தம், 7 லட்சத்து 12 ஆயிரத்து 500 நிதிக்கான ஆணை வழங்கப்பட்டது.
இந்த ஆணையை முதல்வர் ரங்கசாமி கடந்த மார்ச் மாதம், சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார். இது தவிர, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், எதிர்பாராத விபத்தில் இறக்கும் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகையாக முதல்வர் ரங்கசாமி கடந்த 11ம் தேதி வழங்கினார்.
இந்நிலையில் முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து, ரூ.20 லட்சத்திற்கான, காசோலையை, சிறுமியின் பெற்றோரிடம் நேற்று வழங்கினார்.