ADDED : மே 05, 2024 04:22 AM

தமிழகம், புதுச்சேரியில் ஏற்கனவே கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கியது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மோர், நன்னாரி சர்பத், தர்பூசணி, நுங்கு உள்ளிட்டவைகளை நாடி செல்கின்றனர்.
இதுதவிர, 'ஆல் டைம் பேவரேட்' என்ற லிஸ்டில் உள்ள இளநீர் விற்பனையும் ஜோராக நடக்கிறது. சாதாரண நாட்களில் நகர வீதிகளில் உள்ள கடைகளில் இளநீர் ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்பனையாகும். தற்போது, வெயில் காரணமாக இளநீர் வரத்து புதுச்சேரிக்கு குறைந்துள்ளது. இதனால் இளநீருக்கு டிமாண்ட் அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது. சட்டசபைக்கு அருகிலும், பாலாஜி தியேட்டர் அருகிலும் ஒரு இளநீர் ரூ.50க்கும், உழவர்சந்தையில் ரூ. 35 முதல் ரூ. 40 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கிராமப்புறங்களில் ஒரு இளநீர் ரூ. 25க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.