/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஹூக்கான்' மீன்பிடி முறையால் ஏற்படும் பிரச்னை மீன்வளத்துறை, போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
/
'ஹூக்கான்' மீன்பிடி முறையால் ஏற்படும் பிரச்னை மீன்வளத்துறை, போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
'ஹூக்கான்' மீன்பிடி முறையால் ஏற்படும் பிரச்னை மீன்வளத்துறை, போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
'ஹூக்கான்' மீன்பிடி முறையால் ஏற்படும் பிரச்னை மீன்வளத்துறை, போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
ADDED : ஜூன் 27, 2024 02:49 AM
புதுச்சேரி: 'ஹூக்கான்' மீன் பிடி முறையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து புதுச்சேரி, கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட மீன்வளத்துறை மற்றும் போலீஸ்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கி, பேசுகையில், 'தமிழக மீன் வளத்துறை, புதுச்சேரி கடல் பகுதிகளிலும், அதனை ஒட்டி உள்ள, தமிழக கடல் பகுதிகளிலும், மீனவர்கள் 'ஹூக்கான்' மீன் பிடி முறை மேற்கொள்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு ஈடுபடும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழக - புதுச்சேரி மீனவ கிராமங்களில், ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், சுமூகமான சூழ்நிலை ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
கடலுார் மீன்வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், பேசுகையில், 'கடலுார் தாழங்குடா மீனவர்கள் இனிமேல் புதுச்சேரி கடல் பகுதிக்கு வந்து 'ஹூக்கான்' மீன் பிடிப்பு முறையில் ஈடுபடாமல் இருப்பதற்கும், யூனியன் பிள்ளைச்சாவடி மீனவர்கள் இனிமேல் இந்த 'ஹூக்கான்' மீன் பிடிப்பு முறையில் ஈடுபடாமல் இருப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வ சிகாமணி, கிழக்கு போலீஸ் எஸ்.பி., பக்தவச்சலம், புதுச்சேரி மீன்வளத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், மீன் வள உதவி இயக்குனர்கள் கடலுார் யோகேஷ், விழுப்புரம் நித்ய பிரியதர்ஷினி, அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், பெரிய காலாப்பட்டு போலீஸ் நிலைய அதிகாரி குமார், புதுச்சேரி கடலோர போலீஸ் நிலைய அதிகாரி வேலையன் உட்பட பலர் பங்கேற்றனர்.