/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உண்டியல் உடைத்து திருடிய ஆசாமிகளை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
/
உண்டியல் உடைத்து திருடிய ஆசாமிகளை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
உண்டியல் உடைத்து திருடிய ஆசாமிகளை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
உண்டியல் உடைத்து திருடிய ஆசாமிகளை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
ADDED : நவ 09, 2024 06:11 AM

புதுச்சேரி : மேரிஉழவர்கரையில் கோவில் உண்டியல் உடைத்து திருடிச் சென்ற மூவரை பொதுமக்கள் துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி மேரிஉழவர்கரையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் நேற்று காலை 8:30 மணிக்கு அடையாளம் தெரியாத 3 பேர் சந்தேகத்திடமாக சுற்றித்திருந்தனர். அடுத்த சில நிமிடத்தில் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த உண்டியலை உடைத்து சாக்கு பையில் வைத்து கொண்டு மூவரும் வெளியேறினர்.
இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்வேந்தன் கூச்சலிட்டார். பொதுமக்கள் திரண்டு தப்பியோடிய மூவரை துரத்தினர். இதில் இருவர் மட்டும் சிக்கி கொண்டர்.
பொதுமக்கள் இருவரையும் பிடித்து ரெட்டியார்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், நாமக்கல் சேந்தமங்கலம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த அஜித், 22; திருமூர்கவுடண்பாளையம், கபிலர்மலையைச் சேர்ந்த மணிகண்டன், 31; என்பதும், இவர்கள் கோவில் உண்டியலை திருடியது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய நாமக்கல் பெரியசாமி, 34; போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் மேலும் விசாரணை செய்ததில் கைது செய்யப்பட்ட மூவரும் சென்னை பத்ரிமேடு, குமலன்சாவடியில் தங்கி கட்டட கூலிவேலை செய்து வருவதும், மூலக்குளத்தில் வசிக்கும் மணிகண்டனின் தம்பி ஆறுமுகம் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆறுமுகத்தை காண புதுச்சேரி வந்த அஜித், மணிகண்டன், பெரியசாமி மூவரும் 2 நாட்களாக மேட்டுப்பாளையம் சாராயக்கடையில் குடித்துள்ளனர். நேற்று காலை ஊருக்கு திரும்பிச் செல்ல மூவரிடமும் காசு இல்லை. இதனால் முத்துமாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து திருடிச்செல்லும் முயற்சியில் பொதுமக்களிடம் சிக்கியதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.