/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அக்., 29ல் துவங்குகிறது
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அக்., 29ல் துவங்குகிறது
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அக்., 29ல் துவங்குகிறது
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அக்., 29ல் துவங்குகிறது
ADDED : ஆக 20, 2024 05:19 AM
புதுச்சேரி: வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தப் பணிகள், வரும் அக்., 29ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து, கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையம், 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, இறந்த மற்றும் வேறு மாநிலத்திற்கு குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல், வாக்காளரின் முகவரி, புகைப்படம், போன்றவை திருத்தம் செய்தல், ஆகிய பணிகள் வரும் அக்., 29ம் தேதி முதல் துவங்க உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இன்று, புதுச்சேரி சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் சரிபார்க்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.
இது தொடர்பாக நேற்று, கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

