ADDED : ஜூன் 03, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : புதுச்சேரி, குயவர்பாளையம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீதியைச் சேர்ந்தவர் கதிரவன், 36. இவரது மனைவி ஹன்சிய. மகள் கோடீஸ்வரி. சில நாட்களுக்கு முன் கதிரவனுடன் ஹன்சிய சண்டை போட்டுவிட்டு தனது குழந்தையுன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
மன வருத்தத்தில் இருந்த கதிரவன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். இதுகுறித்து அவரது தாய் சுசீலா கொடுத்த புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.