sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்கு

காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்கு

காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்கு


ADDED : ஆக 29, 2024 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2024 11:02 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தவளக்குப்பம் மற்றும் கரிக்கலாம்பாக்கம் ஆகிய இரு இடங்களில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், விபத்துகளை தடுக்க மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவளக்குப்பத்தில் இருந்து, அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக எரியாமல் இருண்டு கிடக்கிறது. அந்த பகுதியில், அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட நகர் பகுதியில் குடியிருப்பவர்கள், சாலையை கடந்து செல்லும் போது, இரவில், வாகன விபத்துக்களில் காயமைடைந்து வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் மது கடைகள் இருப்பதால், குடியிருப்பவர்கள் இரண்டு கிடக்கும் அந்த இடத்தில் மது குடிப்பதால், கிராம பகுதிகளுக்கு செல்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

அதே போல, கரிக்கலாம்பாக்கம் கோட்டைமேட்டு திடலில், பல மாதங்களாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

இரண்டு இடங்களில் எரியாமல் காட்சிப்பெருளாக உள்ள ஹைமாஸ் விளக்குகளை மின்துறை அதிகாரிகள் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us