ADDED : மே 04, 2026 09:00 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளில் வானம் மோகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த ஆண்டு கோடை காலம் துவங்கிய நாளில் இருந்து வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பகலில் நேரத்தில் வெளியில் வரமுடியாமல் அவதிப்பட்டனர். கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டது. நேற்று முன்தினம் அதிக பட்சமாக 101.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கிய முதல் நாளிலேயே வெயில் குறைவாகவும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வரும் 28ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது. கடந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளிலேயே மழை பெய்தது குறிப்பிடதக்கது.
