தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில தி.மு.க., செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் நாளை நடக்கிறது

மாநில தி.மு.க., செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் நாளை நடக்கிறது

மாநில தி.மு.க., செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் நாளை நடக்கிறது


ADDED : மே 26, 2024 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2024 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., செயற்குழு கூட்டம் நாளை நடக்க உள்ளதாக, மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி மாநில தி.மு.க., செயற்குழுக் கூட்டம், நாளை காலை 10:00 மணிக்கு லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில அவைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடக்க உள்ளது.

இக்கூட்டம், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா மற்றும் வரும் ஜூன்., 3ம் தேதி, அவரது 101வது, பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது.

புதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு முகவர்கள் செல்லுதல் மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் சம்மந்தமாக நடைபெறுகிறது.

இதில் மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.,கள், தொகுதி செயலாளர்கள், அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us