ADDED : மே 13, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் கீற்று கொட்டகை எரிந்து தீயில் சாம்பலாயின.
முத்தியால்பேட்டை புதுப்பாளையத்தை சேர்ந்தவர் செங்கேனிராமன். இவரது வீட்டு பின்புறத்தில் கீற்று கொட்டகை உள்ளது. நேற்று மாலை திடீரென கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி புதுச்சேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனர். தீ விபத்திற்கான காரணம் பற்றி முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.