/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் அரசு பெண்கள் பள்ளியில் துர்நாற்றத்தால் மாணவிகள் கடும் அவதி
/
வில்லியனுார் அரசு பெண்கள் பள்ளியில் துர்நாற்றத்தால் மாணவிகள் கடும் அவதி
வில்லியனுார் அரசு பெண்கள் பள்ளியில் துர்நாற்றத்தால் மாணவிகள் கடும் அவதி
வில்லியனுார் அரசு பெண்கள் பள்ளியில் துர்நாற்றத்தால் மாணவிகள் கடும் அவதி
ADDED : ஜூலை 27, 2024 01:43 AM

வில்லியனுார்: வில்லியனுாரில் உள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளிக்குள் மனித மலங்கள் வெளியேறி செல்லுவதால் துர்நாற்றம் தாங்காமல் மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
வில்லியனுார் தென்கோபுர வீதியில் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி உள்ளது.
தெற்கு மாட வீதியில் போலீஸ் ஸ்டேஷன் அருகே பள்ளிக்கு தெற்கு பகுதியில் கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான கட்டண கழிப்பிடம் உள்ளது. இந்த கட்டண கழிப்பிடத்தின் செப்டிக் டேங்க், பள்ளி வளாக பகுதியில் உள்ளது.
கடந்த சில தினங்களாக செப்டிக்டேங்க் வழிந்து பள்ளியின் உள் பகுதியில் செல்லும் மழைநீர் வடிகால் வாயக்கால் வழியாக செல்வதால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவிகள்,ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து பல முறை பள்ளி நிர்வாகம் சார்பில் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் அதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிப்பறையில் ஏற்பட்ட விஷ வாய்வு கசிபோன்று வில்லியனுார் அரசு பள்ளி வளாகத்தில் விபரிதம் நடப்பதற்குள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சரிசெய்யவேண்டும்.
மேலும் ஏழை எளிய பிச்சு மழலையர் மற்றும் மாணவியர்களின் உயிர்களிடம் விளையாடமல், அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, பள்ளி வளாக பகுதியில் உள்ள செப்டிக் டேங்க்கை விபரிதம் நடப்பதற்குள் உடணடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.