/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு மைதான சிந்தடிக் ட்ராக்கில் வெள்ளை கோடு அடிக்கும் பணி தீவிரம்
/
விளையாட்டு மைதான சிந்தடிக் ட்ராக்கில் வெள்ளை கோடு அடிக்கும் பணி தீவிரம்
விளையாட்டு மைதான சிந்தடிக் ட்ராக்கில் வெள்ளை கோடு அடிக்கும் பணி தீவிரம்
விளையாட்டு மைதான சிந்தடிக் ட்ராக்கில் வெள்ளை கோடு அடிக்கும் பணி தீவிரம்
ADDED : மே 24, 2024 04:00 AM

புதுச்சேரி: இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் சிந்தடிக் ட்ராக்கினை தடகள வீரர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில், வெள்ளை கோடு அடிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
புதுச்சேரி உப்பளத்தில் கடந்த 1992-ம் ஆண்டு இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் புதுச்சேரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்திரா காந்தி அரங்கில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் 400 மீட்டர் செயற்கை தடகள ஓடுபாதை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து சிந்தடிக் ஒட்டும் பணிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சிந்தடிக் டிராக் லேயர் கொண்டு வரப்பட்டது.
ஆமை வேகத்தில் இப்பணி நடந்து வந்தது.ஒருவழியாக, அனைத்து பணிகளும் முடிந்தும் கூட விளையாட்டு வீரர்களுக்கு அர்ப்பணிக்காமல் வீணாகி வந்தது.
இது குறித்து தினமலரில் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி படத்துடன் செய்தி வெளியான சூழ்நிலையில், தற்போது சிந்தடிக் ட்ராக்கினை தடகள வீரர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் வெள்ளை கோடு அடிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அடுத்தகட்டமாக மைதானத்தில் கிராஸ் பணியும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
விளையாட்டு துறை அதிகாரிகள் கூறும்போது, கொரோனா தொற்று காரணமாக பணி கிடப்பில் போடப்பட்டன. தற்போது அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றது. மத்திய அரசே நேரடியாக கண்காணிப்பில் பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றது.
எனவே விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து பயன்பாட்டிற்கு வரும். முழுவதும் மத்திய அரசு நிதி பங்களிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
திறப்பு விழா தேதியை மத்திய அரசு மாநில அரசும் கலந்து பேசி இறுதி செய்து அறிவிக்கும் என்றனர்.